குளச்சல் சட்டமன்றத் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் – தாரகை கத்பர்ட் வாக்குறுதி

குளச்சல் சட்டமன்றத் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன்

குளச்சல் சட்டமன்றத் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன்  – குமரி மாவட்டத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ள குளச்சல் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தாரகை கத்பர்ட், அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்த தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என உறுதியளித்துள்ளார்.

தலக்குளம், நெய்யூர், திங்கள்சந்தை, கல்லுக்கூட்டம், ரீத்தாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் அவர், மக்கள் மத்தியில் தனது திட்டங்களை விளக்கி ஆதரவு கோரி வருகிறார்.

மேலும் படிக்க கிராமங்களில் பெண்கள் உற்சாக வரவேற்பு – காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பட் பெருமிதம்


குளச்சல் சட்டமன்றத் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன்  – கடல் வளம் மற்றும் மீனவர் பாதுகாப்பு

பிரச்சாரத்தின் போது அவர் தெரிவித்ததாவது, குளச்சல் தொகுதியில் கடல் வளம் மற்றும் சுற்றுலா வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். கடலில் காணாமல் போகும் மீனவர்களை மீட்க தேவையான உபகரணங்கள் இப்பகுதியில் இல்லாததால், தூத்துக்குடியிலிருந்து கொண்டு வர வேண்டிய நிலை உள்ளது.

இதனை மாற்ற, கடலோர கிராமங்களில் மீனவர்களின் நலனை கருத்தில் கொண்டு, மீட்பு உபகரணங்கள் உள்ளூரிலேயே கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என அவர் கூறினார்.


குளச்சல் சட்டமன்றத் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன்

குளச்சல் சட்டமன்றத் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன்

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு

இளைஞர்களின் எதிர்காலத்தை உறுதிப்படுத்த, அடிக்கடி வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, பெரிய நிறுவனங்களில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் வாக்குறுதி அளித்தார்.


 அடிப்படை வசதிகள் மேம்பாடு

கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு சாலை பணிகள் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், இன்னும் சில பகுதிகளில் சாலை வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டியுள்ளது. அந்த தேவைகளை விரைவாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.


குளச்சல் சட்டமன்றத் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் – விவசாயம் மற்றும் நீர்ப்பாசன திட்டங்கள்

விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு, நீர்ப்பாசன திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படும். குளங்கள் சீரமைப்பு, கால்வாய் பராமரிப்பு, தடுப்பணை அமைத்தல் போன்ற நீராதார மேம்பாட்டு பணிகள் விரைவில் செயல்படுத்தப்படும் என கூறினார்.


முன்மாதிரி தொகுதியாக குளச்சல்

“அடுத்த ஐந்து ஆண்டுகளில் குளச்சல் சட்டமன்றத் தொகுதி ஒரு முன்மாதிரி தொகுதியாக மாற்றப்படும்” என தாரகை கத்பர்ட் உறுதியளித்தார்.


கூட்டணி கட்சிகளின் ஆதரவு

குளச்சல் சட்டமன்றத் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் – இந்த தேர்தல் பிரச்சாரத்தில் திமுக, காங்கிரஸ், மதிமுக, தேமுதிக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் திரளாக கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *